Tuesday, July 29, 2014

தினம் ஒரு அரசியலமைப்பு சரத்து 1

பாராளுமன்றம் 

ஜனநாயக நாட்டின் மிக உயர்ந்த அங்கமாக விளங்கும் பாராளுமன்றம் நாட்டு மக்களின் நலன்காக்கும் சட்டத்தினை இயற்றும் பணி செய்கிறது.  அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி   சரத்து 79 - 122 வரை நாடாளுமன்றத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை விளக்குகின்றன.

சரத்து 79 : நாடாளுமன்றத்தின் அமைப்பு (Constitution of Parliment )

சரத்து 79 ஆனது இந்திய ஒன்றியத்திற்கு நாடாளுமன்றம் ஒன்று இருத்தல் வேண்டும் என்று கூறுகிறது.

நாடாளுமன்றம் கீழ்கண்டவற்றை உள்ளடக்கியது

                           1. குடியரசுத் தலைவர் (President)
                           2. மக்களவை ( லோக்சபா ) 
                           3. மாநிலங்களவை ( ராஜ்யசபா ) என்றும் கூறுகிறது.

1954 ஆம் ஆண்டு 'மக்களவை' மற்றும் 'மாநிலங்களவை' யின் ஹிந்தி வடிவமான முறையே 'லோக்சபா' மற்றும் 'இராஜ்யசபா' ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நாடாளுமன்றம் குடியரசுத் தலைவரை உள்ளடக்கியது எனினும், அவர் நாடாளுமன்றத்தின் அவைகளில் உறுப்பினருமல்ல, நாடாளுமன்ற கூட்டஅமர்வுகளில் அமர மாட்டார்.  கூட்டத்தொடரின் போது அவையின் தொடக்கவுரை ஆற்றுவதோடு சரி ( சரத்து 87).

இருப்பினும் அவர் நாடாளுமன்றத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கிறார் ஏனென்றால்,
                 நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டஒரு மசோதாவனது (bill) குடியரசுத் தலைவரின் கையொப்பமில்லாமல் அவை சட்டமாகா. சட்ட (Act) அந்தஸ்தை கொடுக்கும் அதிகாரம் அவரிடமே உள்ளது. 

மேலும் அவர் ஒரு சில நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கு கொள்பவராகவும் இருக்கிறார்.
              .......சரத்து 85ன் படி நாடாளுமன்ற அவைகளை அல்லது ஏதேனும் ஒரு அவையை கூட்டவும் (Summon), அல்லது கலைக்காது தள்ளிவைக்கவும் (Prorogue), மக்களைவயை கலைக்கவும் (Dissolve) அதிகாரம் பெற்றுள்ளார். 
             ........சரத்து 86ன் படி நாடாளுமன்ற ஈரவைகளில்  ஏதேனுமொன்றிலோ அல்லது கூட்டு அமர்வின் போதோ பேருரை (Address) நிகழ்த்த அவருக்கு அதிகாரம் உண்டு. 
            ........சரத்து 123ன் படி இரு அவைகளுமோ அல்லது ஏதேனும் ஒரு அவையின் கூட்டத்தொடர் அமர்வோ (Session) இல்லாத நேரத்தில் குடியரசுத் தலைவருக்கு அவசரச்சட்டம் (Ordinance) பிறப்பிக்க அதிகாரமுண்டு.

இதேபோல் இன்னும் பல.......
            இத்தகைய கரணங்களால் குடியரசுத் தலைவரை நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமாகவே (Part) அரசியலமைப்பு எடுத்துரைக்கிறது.

இதேபோல் இங்கிலாந்தில்,
நாடாளுமன்றமானது,
                                                 1. அரசர் (King or Queen)
                                                 2. மேலவை (House of Lords)
                                                 3. கீழவை (House of Commons)  உள்ளடக்கியது.

நாடாளுமன்ற அரசாங்கத்தில் ...... நிர்வாக (Executive)  மற்றும் சட்டமியற்றும்         (Parlimentary Government)                              (Legislature) உறுப்புகள்                                                                                                                          ஒன்றையொன்று சார்ந்து உள்ளன.

அமெரிக்காவில்,
       
                             1. மேலவை (Senate)
                             2. கீழவை (House of Representative) ஆகியவற்றை உள்ளடக்கியது.

ஜனாதிபதி முறை அரசாங்கத்தில் ....... நிர்வாக மற்றும் சட்டமியற்றும்                   (Presidential Government)                                        உறுப்புகள் தனித்தனியானவை.

அமெரிக்க ஜனாதிபதி நிர்வாகத்துறையின் தலைவராக உள்ளார்.





























                               



No comments:

Post a Comment