Thursday, October 24, 2013

படித்ததில் பிடித்தது

பால் மாற்றம்

வறுமை
பொறுமைகாத்து
வாழும்
வறண்டுபோன
மண்ணிலிருந்து.......

மகப் பேறுபெற......

அருகே உள்ள
அரசு மருத்துவமனையில்
அடகாத்துக்
கொண்டிருக்கும்
குருவம்மா
மனதில்
மூன்று கேள்விகள்

ஒன்று:
நடக்கப்போவது.....
கத்திக்கொண்டு
நடக்கும்
சுகப்பிரவசவமா
அல்லது
கத்தி கொண்டு
நடக்கும்
ரகப்பிரசவமா

இரண்டு:
பிறக்கப்போவது
ஆண்பாலா
பெண்பாலா

மூன்று:
கொடுக்கப்போவது
தாய்ப்பாலா
கள்ளிப்பாலா.........

       இயக்குநர் பரதன்

No comments:

Post a Comment