சரத்து 80 : மாநிலங்களவை யின் கட்டமைப்பு
80(1) : மாநிலங்கள் அவை, தற்போது(அ) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின்
பிரதிநிதிகள் (அதிகபட்சமாக) 238 229 + 4
(ஆ) குடியரசு தலைவரால் பரிந்துரைக்கப்படும்
உறுப்பினர்கள் 12 12
மொத்தம் (அதிகபட்சமாக) 250 245
80(2) : மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மாநிலங்களவை இடஒதுக்கீடு:
மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மாநிலங்களவை இடஒதுக்கீடு 4ம் அட்டவணையில் அடங்கியுள்ள வகைமுறைகளுக்கு உட்பட்டு இருத்தல் வேண்டும்.
FOURTH SCHEDULE [Articles 4(1) and 80(2)
Allocation of seats in the Council of States
For each State or Union territory specified in the first column of the following table, there shall be allotted the number of seats specified in the second column thereof opposite to that State or that Union territory, as the case may be.
1. Andhra Pradesh 18
2. Assam 7
3. Bihar 22
4. Goa 1
5. Gujarat 11
6. Haryana 5
7. Kerala 9
8. Madhya Pradesh 16
9. Tamil Nadu 18
10. Maharashtra 19
11. Karnataka 12
12. Orissa 10
13. Punjab 7
14. Rajasthan 10
15. Uttar Pradesh 34
16. West Bengal 16
17. Jammu and Kashmir 4
18. Nagaland 1
19. Himachal Pradesh 3
20. Manipur 1
21. Tripura 1
22. Meghalaya 1
23. Sikkim 1
24. Mizoram 1
25. Arunachal Pradesh 1
26. Delhi 3
27. Pondicherry. 1
***
***
Total 233
குடியரசுத் தலைவரால் 12 உறுப்பினர்கள் பரிந்துரை செய்யப்படுகிறார்கள். அந்த 12 உறுப்பினர்களும் கீழ்காணும் துறைகளில் சிறந்த அறிவுடையவராகவோ அல்லது செயல்முறை அனுபவமோ (Special Knowledge or Practical Experience) உடையவராக இருத்தல் வேண்டும்.
(அ) கலை (Art)
(ஆ) இலக்கியம் (literature)
(இ) அறிவியல் (Science)
( ஈ) சமூகசேவை (Social Work)
மேற்கண்ட துறைகளில் சிறந்த அறிஞர்களின் பிரதிநிதித்துவத்தை குடியரசுத் தலைவா பரிந்துரை செய்கிறார். மாறாக அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பரிந்துரைக்கப்படும் உறுப்பினர்கள் இல்லை.
80(4) : மாநிலங்களின் பிரதிநிதித்துவம் (Representation of States) :
மாநிலங்கள் அவை யில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதிகள் அந்த மாநிலச் சட்டமன்றப் பேரைவயின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினாகளால் Proportional Representation by means of Single Transferable Vote முறையினால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கான மாநிலங்களவை இடஒதுக்கீடானது செய்யப்படுகிறது.
அதிகபட்சமாக உத்திரபிரதேசம் ............ 31 உறுப்பினர்கள்
குறைந்தபட்சமாக திரிபுரா ............. 1 உறுப்பினர்
ஆனால் இதற்கு நேர்மாறாக அமெரிக்காவில்
மேலவை (Senate) ஆனது மக்கள் தொகையை கணக்கில் கொள்ளாது 50 மாநிலங்களுக்கும் 2 உறுப்பினர்கள் வீதம் 100 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
80(5) : யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதித்துவம் (Representation of Union Territories) :
மாநிலங்களவையில் யூனியன் பிரதிநிதிகள் நாடாளுமன்ற சட்டத்தின் வாயிலாக வகுத்துரைக்கிற முறையில் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்.
தற்போதைய நடைமுறை : இந்த காரணத்திற்காக (யூ.பி. உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க) அமைக்கப்படுகின்ற electoral college வாயிலாக மறைமுகத் தேர்தல் மூலம் Proportional Representation by means of Single Transferable Vote வாயிலாக தோந்தெடுக்கப்படுகின்றனர்.
7 யூனியன் பிரதேசங்களில் டெல்லி மற்றும் புதுச்சேரி மட்டுமே இராஜயசபாவில் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளன. ஏனெனில் மற்ற யூனியன் பிரதேசங்களில் மக்கள் தொகையானது கணிசமான அளவில் இல்லாததே இதற்கு காரணமாகும்.
மாநிலங்களுக்கான இடஒதுக்கீடு முறைமைகள் மற்றும் மாநிலங்களுக்குள் தொகுதி மறுசீரமைப்பு முறைமைகள் பற்றி சரத்து 82ல் காணலாம்.